சிந்திப்பதற்கு சில - II
1. நீ இவ்வுலகில் நிகழ்த்த விரும்பும் மாற்றம், நீயாகவே இருத்தல் வேண்டும் !
--- மகாத்மா காந்தி
2. ஒரு தந்தை தன் மகர்க்கு ஆற்ற வல்ல மிக முக்கிய உதவியென்பது, அவர்களின் தாய் மீது அன்பு செலுத்துவதே !
--- தியோடர் ஹெஸ்பர்க்
3. ஒரு கோழை மட்டுமே, தான் அச்சம் என்பதையே அறியாதவன் என்று பெருமை பேசித் திரிவான் !
--- பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்
4. இறந்த காலத்து வெற்றிகளே, எதிர்காலத்து வெற்றிகளின் பெரும்பகைவனாம்
--- அஸிம் பிரேம்ஜி
5. கடுமையான உழைப்பு பிரார்த்தனைக்கு நிகரானது
--- லால் பகதூர் சாஸ்திரி
6. நாம் செய்ய நினைக்கும் காரியத்தின் மீது நம் அனைத்து எண்ணங்களையும் ஒருங்கிணைத்தல் அவசியம். ஒரு புள்ளியை நோக்கி ஒருங்கிணைக்கப்படாத சூரியக் கதிர்கள் வெப்ப சக்தியாக ஒரு போதும் மாறுவதில்லை !
--- அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்
7. நீ முடியும் என்று எண்ணினாலும், முடியாது என்று நினைத்தாலும், இரண்டும் சரியானவையே !
--- ஹென்றி ·போர்ட்
8. உடலுறவு என்பது சமையல் போன்றது, இரண்டிலும் திறமையுடன் செயல்பட வேண்டும் அல்லது ஈடுபடாமல் இருப்பது நலம் !
--- ஹேரியட் வேண் ஹார்ன் (பாலா கமெண்ட்: சூப்பர் தல ;-))
9. மிகவும் அதிருப்தியில் உள்ள உங்கள் வாடிக்கையாளர்களே, உங்கள் கற்றலின் மிகச் சிறந்த ஊற்று !
--- பில் கேட்ஸ்
10. உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிகச் சிறிய அளவிலான 'கிறுக்குத்தனத்தை' நீங்கள் ஒருபோதும் இழக்கக் கூடாது !
--- ராபின் வில்லியம்ஸ் (பொன்மொழி 9-க்கான என் கமெண்ட்டை இதனோடு சம்பந்தப்படுத்தி பார்க்க வேண்டாம் :))
11. எல்லா அரசியல்வாதிகளும் ஒரே மாதிரியானவர்களே ! நதியே இல்லாத இடத்திலும் பாலம் கட்டுவதாக அவர்கள் உறுதியளிப்பார்கள் !
--- நிகிடா குருஷ்சேவ்
12. நகைச்சுவை (காமெடி) என்பது மின்னலை ஒரு குடுவைக்குள் பிடிப்பதற்கு ஒப்பானது !
--- கோல்டி ஹான்
நண்பர்களே, உங்களுக்கு மிகவும் பிடித்த பொன்மொழி ஒன்றை பின்னூட்டத்தில் இடுங்கள் !
என்றென்றும் அன்புடன்
பாலா
12 மறுமொழிகள்:
Test !!!
நான் ரசித்தவைகளை வரிசைப்படி சுட்டியிருக்கிறேன்;)
//ஒரு கோழை மட்டுமே, தான் அச்சம் என்பதையே அறியாதவன் என்று பெருமை பேசித் திரிவான் !
//
//நீ முடியும் என்று எண்ணினாலும், முடியாது என்று நினைத்தாலும், இரண்டும் சரியானவையே !
//
//நீ இவ்வுலகில் நிகழ்த்த விரும்பும் மாற்றம், நீயாகவே இருத்தல் வேண்டும் !
//
//உடலுறவு என்பது சமையல் போன்றது, இரண்டிலும் திறமையுடன் செயல்பட வேண்டும் அல்லது ஈடுபடாமல் இருப்பது நலம் !
//
(யோசிப்பவர் கமெண்ட் : கையை சுட்டு கொள்ளாமல் சமையல் கற்று கொள்ள முடியுமோ?!?!;))
//உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிகச் சிறிய அளவிலான 'கிறுக்குத்தனத்தை' நீங்கள் ஒருபோதும் இழக்கக் கூடாது !
//
The truth is more important than the facts.
- Frank Lloyd Wright
உற்றதுரைத்தலை விட உண்மையுரைத்தல் மேல்.
---கையை சுட்டு கொள்ளாமல் சமையல் கற்று கொள்ள முடியுமோ---
Too many cooks spoil the ... ; )
அனைத்தும் அருமை.
நான் ரசித்தவைகள்:
// நீ இவ்வுலகில் நிகழ்த்த விரும்பும் மாற்றம், நீயாகவே இருத்தல் வேண்டும் !
--- மகாத்மா காந்தி//
// இறந்த காலத்து வெற்றிகளே, எதிர்காலத்து வெற்றிகளின் பெரும்பகைவனாம்
--- அஸிம் பிரேம்ஜி//
// கடுமையான உழைப்பு பிரார்த்தனைக்கு நிகரானது
--- லால் பகதூர் சாஸ்திரி//
**// நீ முடியும் என்று எண்ணினாலும், முடியாது என்று நினைத்தாலும், இரண்டும் சரியானவையே !
--- ஹென்றி ·போர்ட்//**
நான் ரசித்த இன்னொன்று:
The biggest risk in life is not taking any risk.
உங்கள் பதிவை அப்படியே 2006 அக்டோபர் மாத ரீடர்ஸ் டைஜஸ்ட் புத்தகத்தில் காப்பி அடித்துவிட்டார்கள்
:-)))
விடுபட்ட ஒன்று.
inflation is when you pay Rs.60 for the Rs.30 haircut you used to get for Rs.10 when you had hair
யோசிப்பவர்,
நன்றி ஐயா :)
பாபா,
நன்றி !
//Too many cooks spoil the ... ; )
//
ஒங்களுக்கு குசும்பு ரொம்ப ஜாச்தி ;-)
ஓகை,
ரசித்ததற்கு நன்றி !
//The biggest risk in life is not taking any risk.
//
அருமை !
லதா,
//உங்கள் பதிவை அப்படியே 2006 அக்டோபர் மாத ரீடர்ஸ் டைஜஸ்ட் புத்தகத்தில் காப்பி அடித்துவிட்டார்கள்
:-)))
//
இதானே வேண்டாங்கறது :)))
ரீடர்ஸ் டைஜஸ்ட் வாசிப்பீங்களா ? (Just for FUN only !)
//நன்றி ஐயா
//
"ஐயா"னெல்லாம் கூப்பிடாதீங்க! ஏதோ ரொம்ப வயசாயிட்ட மாதிரி ஒரு ஃபீலீங்கா இருக்கு!;)
//Too many cooks spoil the ... //
ஆனா,
"சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப் பழக்கம்"
"முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்" அப்படினெல்லாம் எங்க ஊர்ல சொல்லி கொடுத்தாங்களே!!! ;)
Post a Comment